தாய்திரு நாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறைத்துறையில் செவ்வனே சேவையாற்றியும்,பல பகுதியிலுள்ள சிறைச்சாலையில் கைதிகளின் மனநலத்தை மாற்றும் விதமாக கைதிகளுக்கு விவசாயத்தை பயிரிட மேற்கொண்டும்,சிறைக் கைதிகளுக்கு வாழ்வாதாரதை உருவாக்கி தந்த சிறைத்துறை டிஐஜி முருகேசன் அவர்களை கௌரவிக்கும் வண்ணம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் சிறைத்துறை டிஐஜி முருகேசனுக்கு டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் விருதினை அப்துல்கலாம் சங்கத்தின் இரண்டாம் நிலை தலைவர் டாக்டர் வெங்கடேஷ் சங்கையா வழங்கி கவுரவித்தார்.
மேலும் சென்னை பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் பொது நலம் கூடிய மனிதநேய சேவையை போற்றும் வண்ணம் இன்ஸ்பெக்டர் இராஜேஸ்வரி-க்கு கருணை தாய் அன்னை தெரேசா விருதும்,தலைமை காவலர் லீலா ஸ்ரீ அவர்களின் சமூக சேவையை ஊக்குவிக்கும் வண்ணம் சமூக ஊக்குவிப்பாளர் விருதினையும் டிஐஜி முருகேசன் வழங்கி பாராட்டினார்.
அதேபோன்று குழந்தைகள் நல குழுத் தலைவர் ராஜ்குமாருக்கு சேவைச் செம்மல் விருதுனை அப்துல்கலாம் சங்கத்தின் இரண்டாம் நிலை தலைவரும் பூமித்ரா பயோ கிரீன் வேர்ல்டு நிறுவன மேலாளருமான டாக்டர் வெங்கடேஷ் சங்கையா வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் மூத்த பத்திரிக்கை செய்தியாளர் ஆர்எம்எஸ் ராஜா, செய்தியாளர் சிவராம கிருஷ்ணன், சமூக ஆர்வலர் ராமன் மற்றும் அப்துல்கலாம் சங்கத்தின் செயல் ஆலோசகரும், சமூக ஆர்வலருமான இரா.பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்து விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment