புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என மூவின மக்கள் ஒன்றிணைந்து சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, கலை, பண்பாட்டை பேணிக்காக்கும் வண்ணம் பொங்கலோ பொங்கல் என ஒற்றுமைப் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கவிதா, கல்யாணி, பள்ளித்தலைமையாசிரியர் அல்போன்ஸா, உதவி ஆசிரியர்கள் விஜயசுதா, அன்னான் ஜெயநிர்மலா, முத்துக்கனி, அமுதா, பாலசுப்பிரமணி, ஆசிரியர் ராமசந்திரன், கவுன்சிலர் ராஜா,பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீதா, பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் பாண்டிமீனாள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளிக் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment