புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூரில் எழுந்தருளி அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு காமகோடீசுவரி உடனாய கதலிவனேசுவரர் ஆலயத்தின் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு அம்பிகைக்கும் சாமிக்குமிடையே ஏற்பட்ட ஊடலைத்தீர்க்கும் பொருட்டு நத்திதேவர், சுந்தரப்பெருமாள் நாயனார், சன்டிகேசுவரர் ஆகியோர் சாமியுடைய சமாதனத்தூதுவர்களாக அம்மனிடம் சென்று பேசி அம்பிகையின் கோரிக்கையான சாமிக்கு வேண்டப்பட்டவர்களை சேடிப்பெண்டிர் மூலம் வாழைமட்டையால் அடித்து தண்டனை வழங்கி ஏராளமான சொத்துகள், நகைகள் ஆகியவற்றை அம்மன் பேருக்கு எழுதி வைத்து ஊடல் தீர்த்து சாமியும் அம்மனும் தம்பதி சமேதரராக பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பொதுமக்கள் ஊர் பொதுமக்கள் திருமிகு குமார் சிவாச்சாரியார், திருபரணி சிவாச்சாரியார் ,ஆலயப்பணியாளர் திரு சண்முகம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment