புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் தொகுப்பு, வேட்டி சேலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கண்டியாநத்தம் நியாய விலைக்கடையில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு கூட்டுறவு சார் பதிவாளர் வினிதா தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முருகேசன் அப்பகுதியிலுள்ள குடும்ப அடைதாரர்களுக்கு அரசு பொங்கல் தொகுப்பு, வேஷ்டி, சேலையை வழங்கினார்.
இதில் கூட்டுறவு சங்கத்தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவு சங்கசெயலர் பழனிச்சாமி, கூட்டுறவு சங்கத்துணைத்தலைவர் நிசார் அலி,கூட்டுறவு இயக்குநர் அழகு,வார்டு உறுப்பினர் அழகப்பன், நியாய விலைக்கடை பணியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment