புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் அரசு பொங்கல் தொகுப்பு, வேஷ்டி சேலையை குடும்ப அட்டைதாரர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையேற்று துவங்கி வைத்தார்.
வேகுப்பட்டி நியாய விலைக்கடையில் நடைபெற்ற வேஷ்டி மற்றும் சேலை வழங்கும் நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி முன்னிலை வாகித்தர், ஊராட்சித் தலைவர் அர்ச்சுனன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் முத்து, காட்டுப்பாட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. அழகு ராமசந்திரன் ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது.
அப்பகுதியிலுள்ள வேகுப்பட்டி கீழவேகுப்பட்டி, பொன். உசிலம்பட்டி, காட்டுப்பட்டி வெள்ளையாண்டிபட்டி கட்டையாண்டிபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த குடும்ப அடைதாரர்களுக்கு அரசு பொங்கல் தொகுப்பு, வேஷ்டி, சேலையை பொன்னமராவதி வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலம் வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர்கள் செல்வி சண்முகம், கணேசன், அழகி, தேன்மொழி குமார், ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment