மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு. வேல்முருகன் அவர்கள்,பொன்னமராவதி தனி வட்டாட்சியர் திரு. பழனிச்சாமி அவர்கள், இலுப்பூர், குளத்தூர் வட்டாட்சியர்கள், விராலிமலை தனி வட்டாட்சியர் அவர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டார்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர், சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து உடனடி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாமிற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் 11 நபர்களுக்கு சுமார் ரூபாய் ஒரு லட்சத்து ஆயிரத்து ஐநூறு மதிப்புள்ள காதொலி கருவிகள், பிரைலி கை கடிகாரம், மூன்று சக்கர சைக்கிள், பொன்னமராவதி தாலுகா கூடலூர் ஊராட்சியை சேர்ந்த முருகேசன் என்கிற மாற்றுத்திறனாளிக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கிடும் ஆணை ஆகியவை பயனாளிக்களுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment