புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஊராட்சியில் சமத்துவப்பொங்கல் விழா நடைபெற்றது. வேந்தன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவம் மற்றும் சுகாதாரப் பொங்கல் விழா ஊராட்சித் தலைவர் சுமதி ராஜு தலைமையிலான பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
இந்த விழாவில் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, கலை, பண்பாட்டை பேணிக்காக்கும் வண்ணம் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத்துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment