புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. வேகுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பொங்கல் விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் முத்து முன்னிலை வகித்தார்.சமூக நல்லிணக்க பொங்கல் விழாவில் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, கலை, பண்பாட்டை பேணிக்காக்கும் வகையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் பெண்களுக்கு கோலப்போட்டி,பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் செல்வி சண்முகம், கணேசன், அழகி, தேன்மொழி குமார், ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment