புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவாயல் கிராம பட்டியல் இன மக்களுக்கு நடந்த வன்கொடுமை குறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவரை இன்று சென்னையில் சந்தித்து பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு அரசின் நிவாரண தொகை கிடைத்திட வேண்டி 24-01-2023 மதியம் சரியாக 03.00 மணிக்கு சந்தித்து கவன ஈர்ப்பு கோரிக்கைகளை நேரில் வைக்கப்பட்டது.
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இந்த நிகழ்வில் கட்சியின் மாநில தலைவர் வசீகரன், மாநில செயலாளர் ஜோசப் ராஜா, மாநில மகளிர் அணி பொருப்பாளர் ஸ்டெல்லா மேரி, மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர், இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் மு. அப்துல் ஜப்பார் ஆகியோர் பங்கேற்றனர்.
- புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் எம்.மூர்த்தி. பி. காம்,.
No comments:
Post a Comment