புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி நாகப்பா செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1098 சைல்டு லைன் குழந்தைகள் பாராளுமன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்-புதுப்பட்டி நாகப்பா செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் குழந்தைகள் பாராளுமன்றத்தில் குழந்தைகளின் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் வண்ணம், அடிப்படை அரசியல் அமைப்பு சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் குழந்தைகள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட குழந்தைகளுக்கான பாராளுமன்றம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பாராளுமன்ற செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஆர்டிஓ சைல்டு லைன் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜெர்மன் நாட்டு தன்னார்வலர்கள் கரோ, கரோலின் ஆகியோர் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் போக்ஸோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களால் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வை கண்டு ரசித்தனர்.
மேலும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த தன்னார்வலர்களான கரோ,கரோ மாணவ,மாணவிகளின் குறை நிறைகளை தாய்தமிழ் மொழியிலே கேட்டறிந்தனர். இந்நிகழ்வில் 1098 சைல்டு லைன் பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி, திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி, அப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என 80க்கு மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment