இந்தியன் வங்கியில் வாடிக்கையாளரின் குறைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என வாடிக்கையாளரிடன் அடாவடியா பேசும் இந்தியன் வங்கி மேலாளர். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 11 January 2023

இந்தியன் வங்கியில் வாடிக்கையாளரின் குறைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என வாடிக்கையாளரிடன் அடாவடியா பேசும் இந்தியன் வங்கி மேலாளர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள இந்தியன் வங்கியில் வாடிக்கையாளரின் குறைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என வாடிக்கையாளரிடன் அடாவடியா பேசும் இந்தியன் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பொன்-புதுப்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் அதிகப்படியான வாடிக்கையாளர்களாக கிராமத்தினர் உள்ளனர். இவ்வங்கியில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கி பணியாளர்களாக பணியாற்றிய வருகின்றனர். இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ள இளைஞர் ஒருவர் தனக்கு ஏடிஎம் கார்டு வரவில்லை என்று வங்கி ஏடிஎம் கார்டு வழங்கும் பணியாளரிடம் கேட்டுவுள்ளார். ஆனால் அந்த பணியாளர் எவ்வித காரணமின்றி வாடிக்கையாளரான இளைஞரை புதுக்கோட்டைக்கு சென்று கேட்டுக் கொள்ளவும் என்று கூறியுள்ளார். 


வங்கி பணியாளர் முறையாக பதில் கூற மறுத்த போது வாடிக்கையாளரான இளைஞர் ஏடிஎம் கார்டு தொடர்பான விளக்கம் கேட்க மேலாளரிடம் சென்றபோது வங்கி மேலாளர் பணியாளரிடமே சென்று கேட்டுகொள் என்று வாடிக்கையாளரை ஒருமையில் பேசி உள்ளார்.மேலாளரின் ஒருமை பேச்சில் மனமுடைந்த இளைஞர் சமூக ஆர்வலரின் உதவியை நாடினார். சமூக ஆர்வலர் நேரில் சென்று வங்கி மேலாளரிடம் இந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பெரும்பாலான மக்கள் கிராமத்தை சேர்ந்த கைரேகை வைக்ககூடிய எழுத படிக்க தெரியாத பெண்கள் மற்றும் படித்த ஆண்,பெண் ஆவார்கள் என்றும். வாடிக்கையாளர்கள் ஏதேனும் விபரங்கள் கேட்டால் முறையாக பதில் கூற வேண்டியது ஒரு வங்கி மேலாளரின் கடமையே என்று சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.


ஆனால் இந்தியன் வங்கி மேலாளர் சமூக ஆர்வலரிடமும் நான் எந்த பதிலும் சொல்ல முடியாது என்றும் உங்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் நீ பத்திரிக்கை, தொலைக்காட்சியில் போடுறியா என அடாவடியா பேசி உள்ளார்.மேலும் மன உளைச்சலுக்கு உள்ளான இந்தியன் வங்கி வாடிக்கையாளரான இளைஞர் கூறும் போது தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தி மொழி தெரிந்த பணியாளர்கள் அதிகம் இருப்பதால் வங்கிக்கு செல்லும் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், பொன்னமராவதி இந்தியன் வங்கி மேலாளர் போன்று இங்குள்ள பல வங்கி மேலாளர்கள் வாடிக்கையாளர்களிடம் இதுபோன்று அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாகவும். 


இந்தியன் வங்கி மேலாளர் உள்ளிட்ட பல வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை கண்டுகொள்ளாமல்  பணம் படைத்தவர்கள் வரும்பொழுது முழு மரியாதை கொடுத்து அவர்களுக்கு வங்கி பணிகளை உடனே செய்து கொடுப்பதும், ஏழை எளிய மக்கள் வங்கிக்கு வந்தால் இன்று, நாளை என அலையவிடும் ஒருசில வங்கி மேலாளர்கள் மீது திருச்சி ஜோனல் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். பொன்னமராவதி உள்ள அரசு வங்கிகளில் அதன் உயர் அதிகாரிகள் நேரில் சென்று வங்கி வாடிக்கையாளர்களிடம் நேரடியாக கருத்து கேட்க வேண்டும் என்றும் பாதிப்புக்குள்ளான இளைஞர், சமூக ஆர்வலர்கள் ஜோனல் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad