புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் கிராமாலயா இணைந்து நடத்தும் சுகாதாரப் பயிற்சியினை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
இப்ப பயிற்சியில் கிராமாலயா தலைமை அலுவலர் திரு செரிஃப் மற்றும் திருமதி மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் தன் சுத்தம், சுகாதாரமான கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்ப பயிற்சியில் கிராமாலயா தொழில்நுட்ப அலுவலர்கள் சிவனேசன், யுவராஜ், உமா மகேஸ்வரன் மற்றும் கிராமாலயா புதுக்கோட்டை சுகாதார பணியாளர்கள் சத்யா, அம்சவல்லி மரியா, லீனா மற்றும் கௌசல்யா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர் கொண்டனர்.
No comments:
Post a Comment