புதுக்கோட்டை மாவட்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 17 January 2023

புதுக்கோட்டை மாவட்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.


புதுக்கோட்டை பாரளுமன்ற தொகுதியை மீட்க ஒன்று கூட வேண்டும், தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளும், 39 பாரளுமன்ற தொகுதிக்குளாவும் இருக்கிறது. 1 பாரளுமன்ற தொகுதி, 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை ஆறு (6) சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது. 


புதுக்கோட்டை பாரளுமன்ற தொகுதியை பொருத்தவரை நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அதாவது 1951 முதல் 2008 வரை இருந்தது, 2008 தொகுதி சீரமைப்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் மயிலாடுதுறை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர்ஐயர் அவர்களின் சுயலாபத்திற்காக புதுக்கோட்டை பாரளுமன்ற தொகுதியை நான்கு துண்டாகிவிட்டனர். தமிழ்நாட்டில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தும் புதுக்கோட்டை என்று தனி பாரளுமன்ற தொகுதி இல்லை. இதன் விளைவாக கடந்த 2009 முதல் தற்போது வரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என்று மத்திய அரசும் மற்றும் 4 பாரளுமன்ற உறுப்பினர்களும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டமும் செய்யவில்லை. 


புதுக்கோட்டை மாவட்டம் பின்தங்கியே தான் இருக்கிறது. உதாரணமாக 2 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பெரம்பலூர்க்கு ஒரு பாரளுமன்ற தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதி கொண்ட நீலகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பாரளுமன்ற தொகுதி, 4 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிவகங்கை, இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களுக்கும் தனி தனி பாரளுமன்ற தொகுதி இருக்கிறது.


மாவட்ட தலைநகராக கூட இல்லாத ஆரணி, சிதம்பரம்,பொள்ளாச்சி கூட தனியாக ஒரு பாரளுமன்ற தொகுதி இருக்கிறது.ஆனால் தமிழ்நாட்டிலே 6சட்டமன்ற தொகுதி இருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் தான்  தனியாக ஒரு பாரளுமன்ற உறுப்பினர் இல்லை. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் என்னில் அடங்கா வேதனை அனுபவித்து கொண்டிருக்கிறனர். நமது 100 ஆண்டு கனவு திட்டமான தஞ்சாவூர்-புதுக்கோட்டை புதிய ரயில் பாதையும் இதுவரை நிறைவேறபடவில்லை. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று வரை தொடங்கவில்லை.


மற்ற மாவட்டங்களில் எல்லாம் 2 அல்லது 3 கேந்திரிய பள்ளிகள் தொடங்கிவிட்டனர். இது ஒட்டுமொத்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தை அதிர்ச்சி அடைய செய்துவிட்டது. உதாரணமாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய இராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினர் பார்க்க வேண்டும் என்றால் 150கிமீ சென்று பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டிருக்கின்றனர். அதேபோல் தான் விராலிமலை தொகுதி தங்கள் பாரளுமன்ற உறுப்பினரை பார்க்க 150கிமீ கடந்து கரூர் செல்ல வேண்டியுள்ளது. 


இப்படி புதுக்கோட்டை என்று தனி பாரளுமன்ற தொகுதி இல்லாததால் திருச்சி, சிவகங்கை, கரூர், இராமநாதபுரம் பாரளுமன்ற உறுப்பினர்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. அவர்களும் அவர்கள் மாவட்டத்திற்கு தான் நிதி ஒதுக்கி பணி செய்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எதுவும் செய்யபடவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் இன்று வரை புறக்கணிக்கபட்டு கொண்டே இருக்கிறது. ஆதலால் தான் புதுக்கோட்டைக்கு வர வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனையும் புதுக்கோட்டை பாரளுமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் வேறு பகுதிக்கு எடுத்து சென்றுவிட்டனர். 


மத்திய உயர்கல்வி நிறுவனங்களை சென்னையில் பல கல்வி நிறுவனங்களும் காரைக்குடியில் சிக்ரி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் IIM, NIT, IIIT, சட்ட பள்ளி, தஞ்சையில் NIFPT இருக்கிறது. புதுக்கோட்டையில் இன்றுவரை எந்தவொரு மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இல்லை. தற்போது கூட விருதுநகர்க்கு மத்திய அரசு சார்பில் ஜவுளி பூங்கா அமைக்க படுகிறது..புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த கட்ட வளர்ச்சி வேண்டும் என்றால் புதுக்கோட்டைக்கு என தனி பாரளுமன்ற உறுப்பினர் தேவை, வரும் 2024 பாரளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை பாரளுமன்ற தொகுதியை மீட்டெடுக்க புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். 


இழந்த புதுக்கோட்டை பாரளுமன்ற தொகுதியை மீட்டுக்கும் முயற்சியில் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம், வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டு எடுக்க வேண்டும் என்பதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


- புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் M. மூர்த்தி,B.Com,.

No comments:

Post a Comment

Post Top Ad