புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் நகர் பொங்கல் தளத்தில் 74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.அலுவலகத்தில் சமூக நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது.வேகுப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் மெ.அர்ச்சுனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பெரி.முத்து முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ரேஷன் கடை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் செல்வி சண்முகம், கணேசன், அழகி, தேன்மொழி குமார், ஊராட்சி செயலர் எஸ்.சங்கர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகள் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
- புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் எம். மூர்த்தி.
No comments:
Post a Comment