புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, அரசமலை ஊராட்சியில் இன்று 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொன்னமராவதி தாலுகா வட்டாட்சியர் திரு பிரகாஷ், பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. குமரன், அரசமலை கிராம வருவாய் ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன், கிராம உதவியாளர்கள் மற்றும் அரச மலை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். பழனிவேல், துணைத்தலைவர் டாக்டர். அப்துல் சலாம் ஊராட்சி மன்ற செயலாளர் ராமசாமி மற்றும் காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment