புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மூடப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் சங்கத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமெ பொதுமக்கள் கோரிக்கை. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் எம்எம் 255 பால்உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வந்தது.
இச்சங்கம் மூலமாக பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியிலிருந்து பால் வாங்கி இந்த சங்கத்தின் மூலம் விற்பனை செய்வதும், கறவை மாடுகள் வளர்ப்போருக்கு கடனுதவி வழங்குவது, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது, மாட்டுத்தீவனம் வழங்குவது, மாட்டுத்தீவண புல் வழங்குவது, கறவை மாடுகள் வளர்ப்பபோருக்கு பயிற்சி அளிப்பது போன்றவை நடைபெற்று வந்தது.
இச்சங்கத்தின் கீழ் காட்டுப்பட்டி, சந்தைப்பேட்டை,புதுவளவு. பகவாண்டிபட்டி ஆகிய இடங்களில் பால் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.மேலும் தனியாருக்கு குறைந்த விலைக்கு பால் கொடுத்தவர்கள் இச்சங்கம் மூலம் அரசு நிர்ணயித்த விலைக்கு பால் கொடுத்து பயன்பெற்று வந்தனர்.மேலும் நீண்ட ஆண்டுகளாக முட்புதர்கள் சூழ்ந்து பாலடைந்து மூடியே கிடைக்கும் இக்கட்டத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment