புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேராசிரியர் சத்யராஜ் , ஆனந்த்ராஜ் தலைமையில் மங்கனூர் இதே ஊரை சார்ந்த மாணவ செல்வங்களுக்கு பொது தேர்வுக்கு உண்டான பென்சில்,பேனா மற்றும் அனைத்து பொருட்களையும் வழங்கி ஊக்குவித்தோம்.
இளைஞர்களின் வாழ்வியல் வெளிச்சம் என்பது கல்வி ஒன்றே அந்த கல்விக்கான ஒரு சிறு தீக்குச்சியாய் நாங்கள் இருக்கின்றோம் என்பது பெரும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு வருகை தந்து இந்த விழாவை சிறப்பித்து தந்த சிறப்பு விருந்தினர் ஆர்.ஜே குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அண்ணன் ராஜ்குமார் அவர்களுக்கும் மற்றும் 2 BENCH CAFE நிறுவனர் அண்ணன் வல்லம் ரியாஸ் அவர்களுக்கும் we love our village சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த ராஜா, பேராசிரியர் ஆனந்த்,கோபி,பாலா, ரமேஷ் மற்றும் மங்கனூர் ஊரைச் இளைஞர்கள் மஞ்சித்ராம் தேர்வு எழுத பொருட்கள் வழங்கியதற்கு மாணவ மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment