கண்டியாநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 26 September 2023

கண்டியாநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. கண்டியாநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டம் (PKVY) (2023-24) விவசாயிகள் பயிற்சி நிகழ்ச்சிக்கு கண்டியாநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி முருகேசன் தலைமை வகித்தார் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னர் தொடங்கிய விவசாயிகளுக்கான பயிற்சியில் விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண் துணை இயக்குநா் ஆதிசாமி,வேளாண் உதவி இயக்குனர் ரகுமத் நிஷா பேகம்,துணை வேளாண் அலுவலர் முருகன் ஆகியோர் அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், பஞ்சகாவ்யம்,மீன் அமிலம்,நுண்ணுயிர் உரங்கள், பசுந்தாள் உரப்பயிா் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.


இப்பயிற்சியில் வேளாண்துறையினர் மற்றும் மூத்த விவசாயிகள் என 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad