புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், வேந்தன்பட்டி மற்றும் மேலைச்சிவபுரி பகுதிகளில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவின்படி வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் டெங்கு களப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் / ஊர்களில் / தேவையின்றி தெரு ஓரங்களில் கிடக்கும் டயர்கள் வீடுகளில் பயன்பாடின்றி இருக்கும்டயர்களை அப்புறப்படுத்தல் பணி தொடர் நடவடிக்கையாக செய்திட அறிவுறுத்தல் செய்யப்பட்டதின் அடிப்படையில் இன்று 22.9.23டெங்கு களப்பணிகள் 2ம் நாளாக நடக்கும் மேலைச்சிவபுரி பகுதிகளில் இப்பணியானது நடைபெற்றது.
அடுத்து மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவ மாணவிகளுக்குடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது சிறந்த முறையில் பதில்கள் கூறிய மாணவர் முருகவேலுக்கு பேனா பரிசளிக்கப்பட்டது.
மேலும் வேந்தன்பட்டி ஊராட்சிவேந்தன்பட்டி கிராமத்தில் ஊ.ம. தலைவி/ஊராட்சி மன்றம்/சார்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஏடிஸ் முதிர் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி வேந்தன்பட்டியிலுள்ள அரசு அலுவலக கட்டிடங்களில் நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் நா.உத்தமன் பிரேம்குமார் டெங்கு களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment