ஸ்ரீ பட்டமராத்தன் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 24 July 2023

ஸ்ரீ பட்டமராத்தன் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர்.


பொன்னமராவதியில் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம், வி.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ பட்டமராத்தன் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம், வி.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ பட்டமராத்தன் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


இந்த இரத்த தான முகாமிற்கு அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத் தலைவர் ஸ்ரீ. பிரசன்னா சரவணன், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் சந்திரன், புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் அருண்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். புழுதிபட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அர்ச்சனா முன்னிலை வகித்தார்.


பின்பு தொடங்கிய இரத்த தான முகாமில் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தினர், பட்டமராத்தன் டாடா ஏசி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர், குருதி கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு 22 யூனிட்  இரத்தம் தானம் செய்தனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்கள், வி.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், அப்துல்காலம் மக்கள் நலச்சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பட்டமராத்தன் டாடா ஏசி ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.


இரத்த தான முகாம் ஏற்பாடுகளை டாக்டர் அருண்குமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் என்பது பெருமைக்குரியது.


- எம். மூர்த்தி, மாவட்ட செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad