புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவிகளை அப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா தலைமையிலான ஆசிரியர்கள், ஊராட்சி மன்றத்தலைவர் பழனிவேல், சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் ஆகியோர் அப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், புத்தகங்கள் வழங்கி வரவேற்று மகிழ்ந்தனர்.


இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் புவனேஸ்வரி,சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப்பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment