பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 5 May 2023

பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் பத்து ஆண்டுகளாகமாக சீரமைக்கப்படாத சாலை சீரமைக்கப்படுமா? என பொது மக்கள் கேள்வி? பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்படி கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளாக குண்டும் குளியுமாக உள்ள சாலையை பயன்படுத்தி வந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள்,  வாகன ஓட்டிகள் குண்டும் குளியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென பலதுறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்றும் கருப்புக்குடிப்பட்டி கிராமத்திற்கு வருகை தந்த திருமயம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி அவர்களிடன் அக்கிராம மக்கள் பத்தாண்டுகாலம் குண்டும் குளியுமாக உள்ள சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். 


கருப்புக்குடிப்பட்டி கிராம மக்களின் கோரிக்கையேற்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குண்டும் குளியுமாக உள்ள சாலையை சீரமைக்க கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்ததாகவும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டு உள்ளதாகவும் அதனை கண்டித்து கிராமமக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து குண்டும் குளியுமாக உள்ள கருப்புக்குடிப்பட்டி சாலையில் இன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் இது சம்மந்தமாக பேசிய அக்கிராம இளைஞர்கள் கருப்புக்குடிப்படி சாலையை சீரமைக்கும் பணியினை தொடங்க வேண்டும் என்றும். சாலை சீரமைக்காமல் மீண்டும் கிடப்பில் போடபட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்தது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தது உள்ளதாகும் கூறினர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் நேரடியாக தலையிட்டு கருப்புக்குடிப்பட்டி கிராம மக்களின் பத்தாண்டு கால கோரிக்கையை ஏற்று பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள்,வாகனங்கள் செல்ல இப்பகுதி சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு கருப்புக்குடிப்பட்டி கிராம மக்கள், இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


_எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad