மும்பாலை ஊராட்சி கண்டனிவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 1 May 2023

மும்பாலை ஊராட்சி கண்டனிவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மும்பாலை ஊராட்சி கண்டனிவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி அரபு நிஷா  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

பள்ளிக் கல்வி துறை சார்பில் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் கலந்து கொண்டு, பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் தேர்வு பெறாத  மாணவர்களை கண்டறிந்து ஜூன் மாதம் நடக்கின்ற துணை தேர்வில் எழுதுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.


நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில்  மாணவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதேபோல் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மூலம் பள்ளியில்  வளர்ச்சி திட்டம் மற்றும் கற்றல் கற்பித்தல் குறித்த தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளப்பட்டது.


மேலும் தேவையான கற்றல் கற்பித்தல், கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் அரசுப்பள்ளியில் சேர்க்க  பொது மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் மும்பாலை ஊராட்சிக்கு உட்பட்ட மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் திருமதி வாசுகி அவர்கள்,  பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெகதீஸ்வரி அவர்கள்  மும்பாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வேம்பரசி அவர்கள்  பள்ளியில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பள்ளிக்கு தேவைப்படும்  தேவைப்பட்டியல் குறித்தும் கூட்டத்தில் தெரிவித்தார்கள். 


மேலும் இக்கூட்டத்தில் மும்பாலை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகேசன் வீரராகவன் ராமு தங்கமணி வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


-எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad