புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் இரண்டாவது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிஷின் திறப்பு விழா நடைபெற்றது. வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் வீதி நாடகமேடை அருகில் அமைக்கப்பட்ட அ.பழ.சுப.முரு.சுப்பு நினைவாக சுப.முருகப்பன், எம்ஆர்.தேனம்மை ஆச்சி குடும்பத்தினர் சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிஷன் திறப்பு விழா ஊராட்சி மன்றத் தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜு முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்து அனைவரையும் வரவேற்று பேசினார். புதிததாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி ரிப்பன் வெட்டி திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். சுப.முருகப்பன் செட்டியார் குடிநீர் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு ஒப்பந்ததாரர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், பொதுமக்கள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஊராட்சி செயலர் சங்கர் நன்றி கூறினார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment