பொன்னமராவதி பகுதியில் நடைபெறவிருந்த சாலை மறியல் வட்டாட்சியர் பிரகாஷ் அவர்களின் கனிவான பேச்சால் கைவிடப்பட்டது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 16 March 2023

பொன்னமராவதி பகுதியில் நடைபெறவிருந்த சாலை மறியல் வட்டாட்சியர் பிரகாஷ் அவர்களின் கனிவான பேச்சால் கைவிடப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஜெ.ஜெ நகர் பகுதியில் நடைபெறவிருந்த சாலை மறியல் அரசு அதிகாரிகளின் கனிவான பேச்சால் கைவிடப்பட்டது. பொன்னமராவதி ஜெ.ஜெ. நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா கேட்டு போராடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட முடிவெடுத்து இருந்தனர். இத்தகவலை அறிந்த பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜெ.ஜெ.நகர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜெ.ஜெ.நகர் பகுதி மக்களிடையே கனிவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் அவர்களின் பேச்சால் அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்ப்பட்டது.


மேலும் வட்டாட்சியர் பிரகாஷ் அப்பகுதி மக்களிடையே பேசுகையில் இம்மாத இறுதியில் பட்டா வழங்க உள்ளதாகவும்.ஜெ.ஜெ.நகர் பொது மக்களின் நீண்ட ஆண்டு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளதாகவும் அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.மேலும் சாலை மறியலில் ஈடுபடவிருந்த பொதுமக்களிடம் வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகளின் கனிவான பேச்சு வார்த்தையால் ஜெ.ஜெ.நகர் பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு நன்றி கூறி கலைந்து சென்றனர்.


இப்பேச்சு வார்த்தையின் போது மண்டல துணை வட்டாட்சியர் சேகர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தொட்டியம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர், கே.புதுப்பட்டி காவல் ஆய்வாளர், நமணசமுத்திரம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 50க்கு மேற்பட்டோர் உடனிருந்தனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad