புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக உள்ள அம்மா திடலில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பேச்சாளர்களாக தலைமைக்கழக செயலாளர் நேமம் அன்பு முருகன், அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து பேசுகையில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.1972ல் தொடங்கிய காலத்தில் முதலில் சந்தித்த தேர்தலில் வெற்றிக்கண்டு அவர் மறையும் வரை தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்றினார். எல்லா தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் பணியாற்றியதின் காரணமாக இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்றால் மிகையாகாது என்றும்.புரட்சித் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பணியாற்றிய போது ரானுவ கட்டுபாட்டை போன்று அதிமுகவை தொடர்ந்து வழி நடத்தினார் என்றும்.

அவரது மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கான ஆட்சியை நடத்தி சாதனை படைத்தார். முன்னாள் முதல்வர் கொண்டுவந்த ஏழை மக்களுக்கான திட்டங்களான தாலிக்கு தங்கம்,அம்மா ஸ்கூட்டி, பட்டதாரி பெண்களுக்கான நிதி உதவி போன்ற திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டதாவும். திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறி விட்டது என்றும். அதிமுக ஆட்சி தான் எல்லோருக்கும் பொற்கால ஆட்சி என்றும். இனி எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான இரட்டை இலை சின்னம் தான் வெற்றிபெறும் என்றும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் களம் அமைத்து வெற்றி காண்போம் என்றும்.
இதற்கு அனைவரும் ஒற்றுமையோடு பணியாற்ற வேண்டும் என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து சூளுரைத்தார்.இந்நிகழ்வில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகி பிகேவி.குமாரசாமி, பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி.கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் அரசமலை முருகேசன், பேரூர் கழக செயலாளர், தெற்கு ஒன்றிய இணைச்செயலாளர் மோகனா சேகர், முன்னாள் பொன்னமராவதி ஒன்றிய பெருந்தலைவர் அழகு சுப்பையா,மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன், மாவட்ட எம்ஜிஆர் அணி அம்மாபட்டி கணேசன்,கல்லம்பட்டி கணேசன், எம்ஜிஆர் அணி நிர்வாகிகள் கொப்பனாபட்டி, சுப்பிரமணியன், கொன்னையூர் செல்வம், சிறுபான்மையினர் பிரிவு கமர்தீன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோ.பழனியாண்டி, அழகு ரெத்தினம் சுந்தர்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி பழனிச்சாமி,வார்பட்டு தலைவர் மலைச்சாமி ,வேகுப்பட்டி முத்து, ஒன்றிய மாணவரணி தவசி வள்ளிக்கண்ணு, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,.தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment