புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் நேற்று 25.10.2024 பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், மருத்துவர் சுவாமிநாதன்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பிரியா, சுதா, மகேஸ்வரி, ரமேஷ் குமார், சாரங்கபாணி, பழனிவேல், சுந்தரபாண்டியன், இளையராஜா, சீனிவாசன், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மை குழு கூட்ட பொருளாக போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் சமூக சீர்கேடுகளில் போதைப்பொருள் பயன்பாடு மிக முக்கியமான தாக உள்ளது.
ஆரோக்கியமான மாணவர் சமுதாயத்தை சீரழிக்கும் போதைப் பொருள்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதன் மூலம் எதிர்கால சமூகம் போதை பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும் எனவும், பள்ளி அளவில் போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு, பள்ளிகளில் போதை பொருள் பயன்பாடு எதிர்ப்பு மன்றங்களை உருவாக்கப்படுதலை உறுதி செய்ய வேண்டும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது, மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள தேவையான விளையாட்டு பொருட்கள், விளையாட்டு மைதானம் மற்றும் முறையான பயிற்சியாளர் போன்ற ஏற்பாடுகள் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலம் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதன் சாதக பலன்கள் குறித்து விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளி மலம் கழிப்பதால் பொது சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான தொற்றுநோய்கள் ஏற்பட மிக முக்கிய காரணியாக உள்ளது. பள்ளி வளாகம் பள்ளிக்கு வரும் வழியில் தெருக்களில் பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுத்தல் வாயிலாக பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமேகலை, ரகமதுல்லா,சந்தியா, நிவின், வெள்ளைச்சாமி செல்வி ஜாய், சகாய ஹில்டா, கணினி ஆய்வக பணியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment