இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று புதுக்கோட்டையிலிருந்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி குறித்து அமைச்சர் மெய்யநாதன் ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று பேசியதாவது, புதுக்கோட்டை நிகழ்வில் பங்கேற்ற ICAR – IISR கர்நாடகா விஞ்ஞானி டாக்டர். முகமது பைசல் அவர்கள் மிளகுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து பேசினார். கடலூரில் நடைபெற்ற நிகழ்வில் IISR கோழிக்கோடு, விஞ்ஞானி கண்டியண்ணன் அவர்கள் மிளகு சாகுபடி குறித்து முழுமையான விளக்கங்களை கொடுத்தார்.
மேலும், இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் திரு. சிமந்தா சைக்கியா,அவர்கள் உதவி இயக்குனர் திரு கனக திலீபன் இருவரும் மிளகை ஏற்றுமதி செய்வதற்க்கான உரிமம் பெறும் வழிமுறைகள் , ஏற்றுமதிக்கான தரமான மிளகை பிரித்தெடுப்பது மற்றும் ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்து சான்று வாங்குவது குறித்து முழுமையாக விளக்கம் அனைத்து பேசினார்.
தொடர்ந்து மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள கேரள மாநில முன்னோடி விவசாயிகள் திரு. டி.டி. தாமஸ் இடுக்கி.கே.வி.ஜார்ஜ் . அட்டப்பாடி. அ. பாலகிருஷ்ணன் வயநாடு போன்றோரும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். சிறப்பு விருந்தினர்கள் பேசிய அனைத்தும் நான்கு இடங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நான்கு இடங்களில் நடைபெற்ற கருந்தரங்களில் 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்
நிகழ்ச்சியில் முன்னோடி தமிழக விவசாயிகளான ராஜாக்கண்ணு, பாலுசாமி, செந்தமிழ் செல்வன், பாக்யராஜ், பூமாலை, திருமலை, வீரமணி, திருவள்ளுவன், திருமதி நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர், இதில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் மிளகு சாகுபடி குறித்து நேரடியாக பார்த்தும், சந்தேகங்களை கேட்டும் தெரிந்து கொண்டனர். மேலும், மிளகு மற்றும் ஜாதிக்காய் நாற்றுகள் விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வினை காவேரி கூக்குரல் கள இணை ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் ஒருங்கிணைத்தார். கடலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அருண் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் முன்னோடி மிளகு விவசாயி கீழுமாம்பட்டு திருமலை முன்னோடி மிளகு விவசாயி பாளையங்கோட்டை பூமாலை ஆண்டிமடம் மிளகு விவசாயி பழனிச்சாமி விருத்தாசலம் மிளகு விவசாயி பரமசிவம் ஆகிய விவசாயிகள் தங்களுடைய அனுபவத்தை மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் அரியலூர் கடலூர் திருவள்ளூர் வேலூர் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது பற்றிய பயிற்சியை ஈஷா கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மரவிவசாயிகள் மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளனர். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்தும், மிளகு சாகுபடி குறித்தும் கூடுதல் தகவல்களுக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment