இந்து கோவிலுக்கு சொந்த செலவில் மேற்க்கூரை அமைத்துக்கொடுத்த இஸ்லாமிய ஊராட்சி மன்ற தலைவர். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 25 September 2023

இந்து கோவிலுக்கு சொந்த செலவில் மேற்க்கூரை அமைத்துக்கொடுத்த இஸ்லாமிய ஊராட்சி மன்ற தலைவர்.


இந்து கோவிலுக்கு சொந்த செலவில் மேற்க்கூரை அமைத்துக்கொடுத்த இஸ்லாமிய ஊராட்சி மன்ற தலைவர் - திருமயத்தில் நடைபெற்ற மதநல்லிணக்கதிற்கு எடுத்துக்காட்டான சம்பவத்தால் பொதுமக்கள் நெகிழ்ச்சி.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைகுடிபட்டியில் உள்ள செல்வகணபதி மற்றும் பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு விழாக்காலங்களில் பக்தர்கள் வெயில் மற்றும் மழையில் நிற்காமல் தரிசனம் செய்வதற்கு வசதியாக மேற்க்கூரை வேண்டும் என திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தனது சொந்த செலவில் 2.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்க்கூரை அமைத்துக் கொடுத்தார். 


இந்துக்கோயிலுக்கு இஸ்லாமியரான ஊராட்சி மன்ற தலைவர் சொந்த செலவில் மேற்க்கூரை அமைத்துக்கொடுத்த சம்பவம் மத நல்லிணக்கித்திற்க்கு எடுத்துக்காட்டாக விளக்கியதுடன் அதனை பொதுமக்கள் பாராட்டினர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad